1. ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நர்தரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் – குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார். அவரது இயற்பெயர் ராம்சுரத்குன்வர்.
2. குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துட. கங்கை ஆற்றங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.
3. ‘‘என் தந்தை ஒருவரே, வேறொன்றும் இல்லை… வேறு ஒருவரும் இல்லை’’ திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரின் அருள்மொழி இது.
4. திருவண்ணாமலையில் ரமண தரிசனம் கிடைத்தது. பாண்டிச்சேரியில் அரவிந்த தரிசனமும் சூட்சுமமாகக் கிடைத்தது.
5. ஒரு விடுமுறைப் பயணத்தின்போதுதான், மங்களூருக்கு அருகில், `கஞ்சன்காடு’ என்ற இடத்திலிருந்த மகான் பப்பா ராம்தாஸைத் தரிசித்தார். அவரது ஆசிரமத்தில் தங்கவும் செய்தார். அங்கே அவருக்கு பப்பா ராமதாஸ் மூலம் ராம நாம உபதேசம் கிடைத்தது.
6. சிறிது காலம் கழித்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்தது ஒரு புன்னை மரத்தடியில். ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில், `யோகி ராம்சுரத்குமார்’ என்று மாறினார்.
7. திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆஸ்ரமத்தில், அவரது ஜெயந்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்படும். அதேபோல், தமிழகத்தின் பல ஊர்களிலும் யோகியின் ஜெயந்தி விழாவை, அவருடைய பக்தர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
8. ‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்’என்பது அவரது ஆசீர்வாதம்