ஜி20 தலைமை சவால்களை வாய்ப்பாக மாற்றும்

0
132

ஜி20 அமைப்புக்கு பாரதம் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையொட்டி ஜி20 அமைப்பின் இந்தியக் பாரதக் குழுவின் தலைவரும் நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் ஒர் கட்டுரை எழுதியுள்ளார். அதில், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய 20 நாடுகளின் குழுவான ஜி20 அமைப்புக்கு பாரதம் தலைமை ஏற்றுள்ளது. பாரத வெளியுறவு உறவுகள் வரலாற்றில் இது ஒரு சிறப்புமிக்க தருணம். ஜி20 அமைப்பின் தலைவர் என்ற வகையில், வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பை பாரதம் பெற்றுள்ளது. நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதில் செழுமையான வரலாறும், உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாகவும் திகழும் பாரதம், உலகின் சிறந்த நடைமுறைகளை கடைபிடித்து உடனடி தீர்வு காண வேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் இறுதி உச்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில், 43 தலைவர்கள் கலந்து கொள்வார்கள். பாரதத்தின் ஜி20 தலைமையில் பருவநிலை செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான எரிசக்தி மாற்றங்களை உறுதி செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். சர்வதேச பொருளாதாரம் தற்போது மந்த நிலையை சந்தித்து வரும் வேளையில், மோசமான உணவுப் பாதுகாப்பு மற்றும் சீர்குலைந்த விநியோக சங்கிலிகளுடன் நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு பாரதத்தின் வசம் உள்ளது. உடனடி பொது சுகாதாரம், உணவுச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலக்கட்டத்தில் உலகம் உள்ளது. இந்த இலக்குகளை எட்டுவதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொறுப்புமிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சர்வதேச அமைப்புகளின் உருவாக்கத்திற்கு பாரதம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். தொழில்நுட்பத்தை செயல் திறனுடன் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பார்தம் தனது அனுபவங்களையும், அறிவையும் உலகத்திற்கு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக ஜி20 தலைமைப் பொறுப்பு அமையும். ஜி20 நாடுகள் அமைப்புக்கு தலைமை வகிக்கும் பாரதம், மனித குலம் சார்ந்த தொழில்நுட்ப அணுகுமுறையை முன்மாதிரியாக கொண்டுள்ளது. கல்வி முதல் விவசாயம் வரை பல்வேறு துறைகளில் பொது டிஜிட்டல் கூட்டமைப்பு, அனைவருக்குமான நிதி வழங்கல், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் வரைவு அறிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியது. அமைதியின் தூதராக பாரதத்தின் நிலையை வலுப்படுத்தும் வகையில், “தற்போதைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக் கூடாது” என்ற பிரதமரின் உரை கூட்டுப் பிரகடனத்தில் நேரடியாக பிரதிபலித்தது. பொருளாதார, சமூக வளர்ச்சியில் உருவெடுத்து வரும் இளமையான, எழுச்சிமிக்க நாடுகளுக்கு பழைய அதிகார மையங்கள் வழிவிட்டு வரும்ம் சூழலில் பாரதத்தின் லட்சியமிக்க செயல்திறன் கொண்ட தலைமைத்துவம் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் தேவைகள் மற்றும் நலன்களை நோக்கி புதிய அணிகளை திரட்ட வகை செய்யும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற பாதையை நோக்கி, சர்வதேச சவால்களை மாற்றத்துக்கான வாய்ப்பாக மாற்றும் செயல்களில் தமது தலைமை பொறுப்பின் போதும் பாரதம் தொடர்ந்து ஈடுபடும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here