உலகின் வலுவான ஜனநாயக நாடு பாரதம்

0
90

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்யை பாரதம் ஏற்றுள்ளது. இந்த மாதம் முழுவதும் ஐ.நாவின் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும். பல்வேறு பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும். மேலும், இந்த மாதத்துடன் பாரதத்தின் இரண்டு ஆண்டுகால ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பிரந்திநிதித்துவம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான பாரதத்தின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜிடம் பாரதத்தில் நிலவும் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை. பாரதம் பழம்பெருமை வாய்ந்த தேசம். எங்கள் ஜனநாயகத்தின் வேர்கள் 2,500 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்து வந்துள்ளோம். அண்மைக் காலத்திலும் எங்கள் நாட்டின் ஜனநாயகத்தின் 4 தூண்களும் மிகவலுவாக இருக்கின்றன. எங்கள் நாட்டில் சமூக வலைதளங்கள் கூட சுதந்திரமாகவே இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக மாற்றங்களையும் ஏற்றங்களையும் கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. பாரதம் தான் உலகிலேயே வலுவான ஜனநாயகம் உள்ள நாடு. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நடத்துகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்களது மனதில் உள்ளதை சொல்லும் உரிமை இருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here