குதிராம்போஸ் – பிறந்ததினம் இன்று (03.12.1889)

0
123

1. இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.
2. 1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி.
3. தனது பதினாறாவது வயதில் யுகந்தர் (ஜுகந்தர்) இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தார்.
4. 1905 – வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாக போராட்டத்தில் குதித்தார். யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908 ல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது. ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது.
5. அதன்படி, வங்கத்தில் முசாபர்பூரில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் சென்றனர்.
6. 1908, ஏப்.30 ம் தேதி, அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.
7. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8. மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார்.
9. அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 1908-ஆம் ஆண்டி ஆகஸ்ட் 11 ம் தேதி குதிராம் போசுக்கு, முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் “வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்ததது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here