குஜராத் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வந்த 25 பசுக்களுக்கு லும்பி (Lumpy) என்ற வைரஸ் (மாட்டுத் தோல்களில் வரும் தொற்று நோய்) தாக்கியது.
பசுக்களை தாக்கியுள்ள நோய் மறையு மானால் பசுக்களுடன் யாத்திரையாக வந்து துவாரகாதீஷ்வரை தரிசனம் செய்வதாக வேண்டிக் கொண்டார்.
அது போலவே பசுக்களுக்கு வந்த நோய் அகன்றது. தன்னுடைய பசுக்களை ஒட்டிக் கொண்டு கட்ச் லிருந்து புறப்பட்டு துவாரகா (450 கி.மீ.) சென்று பசுக்களுடன் துவாரகா தீஷ்வரை தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார்.
பசுக்கள் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு உதவிடும் வகையில் புதன்கிழமை இரவு கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.