ஹிந்துக் கடவுள் குறித்து அவதூறு: எம்.பி., மஹுவா மொய்த்ரா கைது செய்ய இந்து மக்கள் வலியுறுத்தல்

0
155

வட அமெரிக்க கனடாவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலை என்ற ஆவணப் பட இயக்குனர், தான் இயக்கியுள்ள, ‘காளி’ என்று பெயரிட்ட ஆவணப் படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஹிந்துக் கடவுள் காளியை அவமதிக்கும் வகையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தப் படத்தை தடை செய்யவும், லீனா மணிமேகலையை கைது செய்யக் கோரியும், நம் நாட்டின் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன.

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த எம்.பி., மஹுவா மொய்த்ரா, இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

‘காளியை மாமிசம் உண்ணும், சாராயத்தை ஏற்கும் கடவுளாகவே பார்க்கிறேன்’ என, அவர் குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சுக்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here