வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுட்டுகொன்ற வழக்கில் கைதான 14 பேரில் முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி வழக்கின் தீர்ப்பில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழரை ஆண்டு காலம் தண்டனை. சிறை செல்லும்போது
அவருக்கு வயது 21. சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம். அதற்குக் கிடைத்ததோ பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு ‘இராப்பிச்சை’ எடுக்க ஆரம்பிக்கிறார். பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்துவிட்டதே என்று நினைத்த அவர், அதையும் நிறுத்தி விட்டார். விளைவு பல நாள் பட்டினி.
ஒருநாள் பசி பொறுக்க முடியாமல், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த தனது நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார். பசியால் வாடிப்போன நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளமே தெரியவில்லை. ‘‘பாரதி, நான்தான் நீலகண்ட பிரம்மச்சாரி’’ என்ற சொன்னவுடன், ‘‘நீலகண்டா… என்னடா இது கோலம்’’ என்று அவரை கட்டி அணைத்துக் கொண்டார் – மகாகவி.‘‘பாரதி, எனக்கு ஒரு நாலணா (25 பைசா) கொடேன். சாப்பிட்டு நான்கு நாளாச்சு’’ என்றார். இதைக் கேட்டவுடன்
கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்துகொடுக்கிறார். அப்போது பாரதியின் உள்ளத்தில்இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல்தான் –
‘‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’’.