கோவையில் ஒரு லவ் ஜிஹாத்

0
223

கோவை மாவட்டம், கோட்டைப்பாளையத்தை சேர்ந்த, பிரியதர்ஷினி என்பவர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மாற்று மதத்தை சேர்ந்த வாலிபர் மீது காதல் ஏற்பட்டது. இருவரும், 2018ம் ஆண்டு ஓடந்துறைப்பள்ளியில் திருமணம் செய்து கொண்டோம்.மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தோம்.2020ல் குழந்தை பிறந்த நிலையில், எனது கணவரின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டது.மாமனார், மாமியாரிடம் புகார் தெரிவித்தபோது, எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கூறினர்.இயலாது என்று கூறியதால் அவர்களும் என்னை துன்புறுத்தினர்.இந்நிலையில், மூன்று மாதங்களாக வீட்டுக்கு கணவர் வருவதில்லை.இதுகுறித்து விசாரித்தபோது அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.என்னை ஏமாற்றி திருமணம் செய்த கணவர் தற்போது மிரட்டல் விடுக்கிறார்.தற்போது அந்த பெண்ணும் சேர்ந்து என்னை மிரட்டுகிறார்.அவரது பெற்றோரும் அதற்கு உடந்தையாக உள்ளனர்.இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.’லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் என்னிடம் காதல் செய்வதுபோல் நடித்து திருமணம் செய்து, குழந்தைக்கு தாயாக்கி விட்டு கொடுமைப்படுத்தியதுடன் தற்போது என்னை கைவிட்டுள்ளனர்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here