ஸ்வாவலம்பி பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் உட்பட 16 மாவட்டங்களில், மாவட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் மையங்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாரதம் வெறும் விவசாய நாடு என்று ஒரு அனுமானம் உள்ளது.ஆனால், நமது பாரதம் வெறும் விவசாய நாடு மட்டுமல்ல. அதன் நீண்ட நாகரீகம் நமக்கு 64 வகையான கலைகள் உள்ளதாகக் கூறுகிறது.அந்த காலத்தில் ஈருந்தே இங்கு தொழில்துறையும் பெரிய அளவில் இருந்தது.நாம் உலகத்துடன் வியாபாரம் செய்தோம்.தரம்பால் ஜி, பாரதத்தின் சூழல் குறித்து நிறைய ஆய்வுகளை எழுதியுள்ளார்.18ம் நூற்றாண்டில் பாரதம் அறிவியல் மற்றும் தொழில்துறையில் முன்னேறிய நாடாக இருந்தது என்று அவரது புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.ஆங்கிலேயர்கள் பாரதத்தின் தொழில்களை எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்பதை வில் டூரன்ட் என்பவர் புள்ளிவிவரங்களுடன் சொல்லியிருக்கிறார்.
பாரதத்தில் உள்ளூர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அமைப்புகள் ஏற்கனவே இருந்தன.ஆனால் சில காரணங்களால் நாம் வேலைவாய்ப்பில் பின்தங்கினோம்.சுதந்திர பாரதத்தில் நாம் சொந்தக் காலில் நிற்க எடுத்திருக்கப்பட வேண்டிய முயற்சிகள் நடக்கவில்லை.நமது மட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை இன்று நாம் சிந்திக்க வேண்டும்.வேலைவாய்ப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும்.சுயதொழில் செய்ய அரசு உதவியை நாடும் இளைஞர்களை நிர்வாக அலுவலர்கள் அதைரியப்படுத்தக்கூடாது.அவர்களை சரியாக வழிநடத்துங்கள், அவர்களை நம்புங்கள், ஊக்குவிக்கவும்.சுயதொழில் என்பது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சமூகத்தில் சுயதொழில் செய்வதற்கான சாதகமான சூழல் இருக்க வேண்டும்.பாரதத்தை தன்னிறைவு கொண்டதாக மாற்றும் இந்த பிரச்சாரம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சாரமாக மாற வேண்டும்.
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் பலர், தேசிய சிந்தனை கொண்ட அமைப்புகளால் திறன் பயிற்சி பெற்றார்கள்.அவர்கள் இப்போது தங்கள் சொந்த இடத்திலேயே வேலை செய்ய முடியும், அவர்கள் பிழைப்புக்காக பெரிய நகரங்களை நோக்கி ஓட வேண்டியதில்லை.பாரம்பரிய திறன்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை சேர்ப்பதன் மூலம், மக்களின் திறன்களை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும்.பாரதத்தை தன்னிறைவு நாடாக மாற்ற, செல்வத்தை உருவாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சுதந்திரத்திற்கு முன்பு, பாரதத்தை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்தார்கள், ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு, பாரதத்தின் தொலைநோக்கு பார்வையின்படி இந்த திசையில் சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. நமது சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதில் மட்டும் நின்றுவிடாமல், சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் துறைகளிலும் சுதந்திரமாக நமது பாரதப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என நமது மக்கள் நினைத்தனர். சோசலிசம் மற்றும் கலப்புப் பொருளாதாரத்தின் பாதையை ஏற்றுக்கொண்டதால் நாம் எங்கோ பின்தங்கிவிட்டோம்” என தெரிவித்தார்.
தலைமை விருந்தினர் ஓம்பிரகாஷ் பேசுகையில், “காதி கிராமத் தொழில்கள் மத்திய அரசின் மிக முக்கியமான சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமாகும்.இதன் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு சுயதொழில் செய்ய மக்களை ஊக்குவித்து, அதற்கான உதவிகளையும் வழங்கி வருகிறது” என்றார்.
ஸ்வவ்லம்பி பாரத் அபியான் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஜிதேந்திர குப்த், “பாரதத்தை சுயசார்பு நோக்கி அழைத்துச் செல்வதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.பாரதத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் பாரதத்தை தன்னிறைவு அடையச் செய்யத் தீர்மானித்துள்ளன. அதிகாரப் பரவலாக்கம், தொழில்முனைவு, கூட்டுறவு மற்றும் சுதேசி தயாரிப்புகள் ஆகிய நான்கு கட்டங்களில் வேலை செய்வதன் மூலம் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இந்த திசையில், முதலில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கும் மையங்களைத் தொடங்கி, அதன் மூலம் சுயதொழில் பற்றிய தகவல்களை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களை வேலை வாய்ப்புக்கு பதிலாக சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதும், சுயதொழில் தொடர்பாக தேவையான தகவல்களை வழங்குவதுமே வேலைவாய்ப்பு உருவாக்கும் மையத்தின் அடிப்படை உணர்வு. வேலைகள் பற்றிய தகவல்களும் இங்கே கொடுக்கப்படும் ஆனால் வேலை என்பது மிகப்பெரிய வேலை வாய்ப்பாக மாற முடியாது.சுயதொழில் தான் மிகப்பெரிய வேலை வாய்ப்பு” என கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் துணைத் தலைமைச்செயல் அதிகாரி ஓம்பிரகாஷ், ஸ்வாவ்லாம்பி பாரத் அபியானின் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளர் ஜிதேந்திர குப்த்,மற்றும் மத்திய பாரதத்தின் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் மகளிர் விவகாரத்துறைத் தலைவர் பிரதிபா சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதேசி ஜாக்ரன் மஞ்சின் ஸ்வவ்லம்பி பாரத் அபியான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கும் மையங்கள் செயல்படும்.இந்த மையங்கள் வேலைவாய்ப்பு வழங்கும் பணியை தாங்களாகவே செய்யாது, இவை வேலைவாய்ப்பு வசதி மையம் அல்லது ஆலோசனை நிறுவனம் போன்று செயல்படும்.இந்த மையங்களில் அரசு, அரசு சாரா, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படும்.