பாகிஸ்தானுக்கு தகுதியில்லை

0
123

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும்.அந்த வகையில் இந்த டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் பாரதம், இந்த சமயத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொணு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இரண்டு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்திக்கிறது.இந்த கூட்டங்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.கடந்த 15ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.முன்னதாக இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகளின் மீட்சி, காலநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, வழக்கம் போல காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.அதற்கு தக்க பதிலளித்த ஜெய்சங்கர், “நாங்கள் பலதரப்பு ஒத்துழைப்பின் அவசியம் பற்றி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.இதில் ஒருமித்த கொள்கையை ஏற்படுத்துவதை உலக நாடுகள் தாமதிக்கக் கூடாது.காலநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு என பல விஷயங்களில் சிறந்த தீர்வை எட்ட நாங்கள் முயற்சிக்கிறோம்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்த அவை கண்டிக்க வேண்டும்.பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு புகலிடம் கொடுத்த நாடு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு, இதுகுறித்து ஐ.நா.அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here