பிரான்சில் நடராஜர் சிலை மீட்பு

0
228

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 500 வருடங்கள் பழமையான நடராஜர சிலை, கடந்த 1972ம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். எனினும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத்தில், அந்த நடராஜர்சிலை இரு நாட்களுக்கு முன் ஏலம் விடப்பட உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறைக்கும் பாரிஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்திய தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இதனால், நடராஜர் சிலை, ஏலம் விடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிலையை பிரான்ஸிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தூதரகம் வாயிலாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here