எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு

0
250

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் நிகழ்த்தி வரும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. “புராஜெக்ட் வர்தக்” திட்டத்தின் கீழ், மேற்கு அஸ்ஸாம் மற்றும் மேற்கு அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலை திட்டங்களையும் எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மேம்படுத்தி பராமரிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகனப் போக்குவரத்து கடினமாக இருப்பதால், செலா சுரங்கப்பாதை மற்றும் நெச்சிபு சுரங்கப்பாதை ஆகிய இரண்டு சுரங்கப் பாதைகளும் கட்டுமானத்தில் உள்ளன. இந்த இரண்டு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் முடிந்ததும், கடுமையான குளிர்காலத்தில் கூட மக்கள் அதில் பயணிக்க முடியும்.இது ராணுவம் மற்றும் பொதுமக்களின் வேகமான அனைத்து காலநிலை போக்குவரத்துக்கு மட்டுமின்றி இப்பகுதியின் சுற்றுலாவையும் மேம்படுத்தும். சாலை இணைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைத் தவிர, தவாங் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பிற எல்லைப் பகுதிகளில் மொபைல் இணைப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தவாங் மற்றும் தவாங் மாவட்டத்தின் பிற எல்லைப் பகுதிகளையொட்டி அதிக மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here