சிவலிங்கத்தை சேதப்படுத்திய மோனு கான்

0
120

மத்தியப் பிரதேசத்தின் பில்வாரி மொஹல்லாவில் உள்ள ஒரு பழமையான சிவன் ஹனுமான் கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை மோனு கான் என்கிற ஷம்ஷேர் என்ற நபர் சேதப்படுத்தியுள்ளான். அந்த முஸ்லிம் நபரை காவல்துறையினர் கைது செய்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அறிக்கைகளின்படி, டிசம்பர் 18 அன்று இரவு, மோனு கான் கோயிலுக்குள் நுழைந்து கோயில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தையும் மற்ற ஹிந்து தெய்வங்களின் சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளான். மேலும் கோயிலைச் சுற்றியுள்ள உள்ளூர் பக்தர்களையும் கடுமையான வார்த்தைகளை பயனடுத்தி திட்டினான்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோனு கான், சிவலிங்கத்தின் மீது கல்லை எறிந்து உடைத்தது உட்பட தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என கூடுதல் எஸ்.பி ஷிவ் குமார் சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here