இது ஒரு காதல் கதை…
மனிதனுக்கு கணிதத்தின் மேல் ஏற்பட்ட காதலால் மிகக் கடினமான சூழலிலும் காதலைக் கைவிடாமல் இருந்தவர்.
கணிதம் இவருக்கு மிகவும் பிடித்தது… இவரையோ வறுமைக்கு ரொம்பவும் பிடித்தது.
முடிவிலியை அறிந்த மனிதன் – தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி- என்று வெளிநாட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டவர்.
வெளிநாட்டுக்கு சென்றபோதும், தர்மத்தை கடைபிடிக்கவேண்டும் என தாயார் கூறியதால், மிகக் கடுமையான இயற்கை சூழலிலும் தனது வாழ்க்கை முறையை – உணவு உட்பட அனைத்தையும் – மிக ஒழுக்கமுள்ளதாகக் கடைபிடித்தவர்.
இவர் குறுகிய காலங்களிலேயே, (அதாவது 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை) 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
“நான் அவரைப் போல ஒருவரை சந்தித்ததில்லை, அவரை உலகின் தலைசிறந்த கணித மேதைகள் யூலர் அல்லது ஜேக்கபியுடன் மட்டுமே ஒப்பிட முடியும்.” – ஹார்டி
இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஈரோட்டில் பிறந்தவர் ராமானுஜன். இவருடைய 16-வது வயதில் “A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics” என்ற புத்தகம், இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
கணித கண்டுபிடிப்புகளுடன் குறிப்பேடுகளை நிரப்பினார். இறுதியாக அவர் இந்திய கணிதவியலாளர் ராமச்சந்திர ராவ் அவருக்கு உதவிகள் செய்தார்.
கணிதவியலாளர் ஹார்டியுடன் ஐந்தாண்டுகள் கேம்பிரிட்ஜில் ராமானுஜன் பணியாற்றியது கணித உலகிற்கு பல உன்னதங்களைக் கொடுத்தன.
1918 ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அன்னிய காலநிலை, மற்றும் இதர சூழ்நிலைகள் அவரது உடல்நலத்தை பாதித்தது. அவரது 1920-ல் இறந்தார்.