ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி

0
86

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஏராளமான பக்தர்கள் முதல் நாளில் இருந்தே வரத் தொடங்கினர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மண்டல பூஜையை முன்னிட்டு இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இதனை காண பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். முக்கிய திருவிழாவான மண்டல பூஜை, நாளை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here