சோதனைக்கு தயாராகும் புதிய ஏவுகணைகள்

0
137

இந்திய ராணுவம் தற்போது துவங்கியுள்ள 2023ம் ஆண்டில் முதல் முறையாக ஐந்து புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது.

அஸ்திரா மார்க் 2 (Astra Mk2): இந்த ஏவுகணையானது விமானங்களில் இருந்து வான் இலக்குகளை நோக்கி ஏவப்படும் தொலைதூர ஏவுகணையாகும் இந்த ஏவுகணை தான் AESA ரேடாரை பெறும் முதல் இந்திய வானிலக்கு ஏவுகணையாகும். இதன் தாக்குதல் வரம்பு 160 கி.மீ தூரத்துக்கும் அதிகமாகும் இதன் காரணமாக இத்தகைய தொலைவுகளுக்கு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகள் கொண்டசொற்ப நாடுகளின் பட்டியலில் பாரதம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ரம் 2 (Rudram 2): ருத்ரம் ஏவுகணை ஏற்கனவே பூமியில் இருந்து 15 கி.மீ உயரத்தில் வெர்றிகரமாக சோதனை செய்யப்பட்டது அப்போது மாக் 8 வேகத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அது துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஆண்டு இந்த வகை ஏவுகணைகள் சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்.எஸ்.எம்.எஸ் எம்.ஆர் (NASM MR): கடற்படைக்கான இந்த அதிநவீன இடைத்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் ஏவுகணைகள் 150 கி.மீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. இந்த ஆண்டில் இதன் சோதனைகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

வேதா (VEDA): இது அடிப்படையில் கே 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகளை அடிப்படையாக கொண்ட மேம்படுத்தப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட ராக்கெட் ஆகும். இதன் மூலமாக இந்திய ராணுவத்திற்கு தேவையான சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதன் சோதனைகளும் 2023ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே 5 (K 5): மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஏவுகணையானது இந்திய ராணுவத்தின் அணு ஆயுத தாக்குதல் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது. இது அதிக தூரம் செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையாகும். இதனுடைய சோதனைகளும் இந்த ஆண்டு துவங்கும் என பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here