புதிய நாடாளுமன்ற கட்டடம்

0
181

பாரதத்தின் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ராஜபாதை சீரமைப்பு, துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய அரசின் செயலகம் உள்ளிட்ட புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக் குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி, புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here