காக்கப்பட்ட பழமையான கோயில்கள்

0
96

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் காளியம்மன் கோயில் தெரிவுல் உள்ள பழமையான காளியம்மன் கோயில் மற்றும் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்களைமெட்ரோரயில் பாதைஅமைப்பதற்காக இடிக்க மாட்டோம் என தமிழக அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தன. இதனையடுத்து அப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் சி.எம்.ஆர். எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காளியம்மன் கோயிலை இடிப்பது தொடர்பாக கடந்த மாதம் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், காளியம்மன் கோயிலை இடிப்பதற்காக போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாக பொறியாளர், காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். கோயில் ஆர்வலர்கள், ஆலயம் காப்போம் அமைப்பினர், இந்து முன்னணி போன்ற பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோயில் இடிப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் மூன்று பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், கோயில் அமைந்துள்ள நிலம், ‘ஆக்கிரமிப்பு’ என பதிவு செய்யப்பட்டுள்ளதும், இதை பயன்படுத்திக்கொண்டு மாநகராட்சி நிர்வாகம், கோயிலை இடிப்பதும் தெரிய வந்தது. கோயிவில் ஆர்வலர் கவுதமன் இதுகுறித்து கூறுகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தனது வகைப்பாட்டை மாற்றாவிட்டால், அரசு பதிவேடுகளின்படி புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ளதாக கூறப்படும் அனைத்து கோயில் களும் இடிக்கப்படும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here