மத்திய அரசின் அரசு சேவைகளை இணையமயமாக்கும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, குடியரசு தின மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளில், முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள் பங்கேற்பதற்கான மின் அழைப்பிதழ்களை அனுப்பவும், அந்நிகழ்வுகளைக் காண பொதுமக்களுக்கு இணைய வழியே நுழைவுச்சீட்டு வழங்குவதற்கும், இணைய வழி மேலாண்மைத் தளமான ‘அமந்த்ரன்’ www.aamantran.mod. gov.in மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட்டால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தளம், பொதுமக்களுக்கு அவர்கள் உள்ள இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், எங்கிருந்தாலும் குடியரசு அல்லது சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டைப் பெறுவதற்கான வசதியுடன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள் இணைய வழியாகவே அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. இந்தத் தளம், பயனாளர்களுக்கு எளிய செயல்முறையைக் கொண்டுள்ளதோடு, அரசுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும். அமந்த்ரான் போர்டலில், மேம்பட்ட பாதுகாப்பிற்கான கியு.ஆர் குறியீடு அடிப்படையிலான அங்கீகாரம். அங்கீகாரம். மின்னஞ்சல்கள், எஸ்.எம். எஸ் மூலம் பாஸ்கள், டிக்கெட்டுகள் டிஜிட்டல் டெலிவரி. ரத்து செய்ய முடியாத மற்றும் மாற்ற முடியாத டிக்கெட்டுகள். அழைப்பாளர்களிடமிருந்து அவர்களது சம்மதத்தைப் பெறும் ஆர்.எஸ்.வி.பி வசதி, எதிர்கால நிகழ்வுகளைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்காக நிகழ்வுக்குப் பின்னான தரவு பகுப்பாய்வு போன்றவை இடம் பெற்றுள்ளன.