ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைப்பின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் அளித்த பேட்டி ஒன்றில், “அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் உரிய நேரத்தில் முடிவடையும். வரும் டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோயிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ஸ்ரீராமரின் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும். கோயில் திறப்பு கொண்டாட்டங்கள் டிசம்பர் மாதமே தொடங்கி விடும்” என கூறினார்.