தெற்கு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தூரு பிளாக்கில் உள்ள டெத்தனில் உள்ள பழங்குடியின மக்கள், தங்கள் கிராமத்தில் சுதந்திரமடைந்தது 75 வருடங்கள் கழித்து தற்போது முதல்முறையாக மின்சார வசதி கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர். வெறும் 200 பேர் மட்டுமே வசிக்கும் அந்த கிராமம், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட மத்திய அரசின் பிரதம மந்திரி மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிப்படை வசதியை தற்போது பெற்றுள்ளது. மின்மாற்றிகள், 38 எஸ்.டி மற்றும் 57 எல்.டி மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, கிராமத்தில் உள்ள 60 வீடுகளில் தற்போது விளக்குகள் ஒளிர்கின்றன.அங்குள்ள குடியிருப்பாளர்கள் இந்த மகிழ்ச்சியின் தருணத்தைக் கொண்டாட நடனமாடி மகிழ்ந்தனர். மத்திய அரசுக்கு அவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர். 75 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் எரிசக்தி மற்றும் ஆற்றல் தேவைக்காக பாரம்பரியமாக மரங்களையே நம்பியிருந்தனர். வெளிச்சத்திற்காக எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளையை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.