ஜி20 மாநாட்டுக்கு தற்போது – தலைமையேற்று நடத்தும் பாரதத்தில், ஜி20 மாநாட்டின் பணிகள் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஜி20 மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வகையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜி20 மாநாடு கூட்டம் முதன்முறையாக நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாட்டு குழுவினர் கொல்கத்தா வருகை தருகின்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு, மேளதாளங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வருகை தரும் அவர்களுக்கு வழியெங்கும் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் இந்த மாநாடு நேற்றுத் தொடங்கி வரும் 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.