நமது கலாச்சாரம் நன்றியுணர்வு பாரம்பரியம்

0
264

புனேயில் பிரசாத் பிரகாஷனின் வைர விழா நிறைவு விழாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், மகாராஷ்டிராவின் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் சுதிர் முங்குந்திவார், மூத்த இந்தியவியலாளரும், டெக்கான் கல்லூரி டீம்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர். ஜி.பி. டெக்லூர்கர், பிரசாத் பிரகாஷனின் டாக்டர் உமா போதாஸ் மற்றும் புத்தக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். வெவ்வேறு எழுத்தாளர்களின் பதின்மூன்று புத்தகங்கள் பிரசாத் பிரகாஷனாலும், அனாஹத் பிரகாஷனாலும் பிரமுகர்களால் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் மோகன் பாகவத், “மகிழ்ச்சியே மனித வாழ்க்கையின் குறிக்கோள், ஆனால் உலகம் இரண்டு நீரோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சியின் அர்த்தம் என்ன? இதில் ஒன்று உலகத்தனமானது மற்றொன்று பாரதத்தினுடையது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இந்த தேடலில் நிறைய விஷம் வெளிவந்துள்ளது. இந்த விஷத்தை ஜீரணிக்கும் திறன் பாரதத்துக்கு உள்ளது என்று உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. தேடுபவர் தனது தேடலின் முடிவுகளைக் கண்டுபிடிக்காத சூழலில் எண்ணங்கள் உச்சநிலைக்கு செல்லும். நமது கலாச்சாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு புருஷார்த்தங்களைப் பின்பற்றும்போது, நாம் எந்த எல்லைக்கும் செல்ல மாட்டோம். பரிவர்த்தனைகளால் மட்டும் உலகம் இயங்க முடியாது. உலகம் அதன் இருப்பு என்ற நம்பிக்கையில் இயங்குகிறது. மனிதர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள், மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள். அதனால்தான் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் நன்றி உணர்வு இருக்கிறது. நமது பண்பாடு மட்டுமே மனிதர்களை மனித வாழ்வில் வாழ வைக்க பாடுபடுகிறது. நாம் கலாச்சாரம் என்று அழைப்பது தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் நடத்தை பாரம்பரியம்.

நதியை நமது தாயாக நாம் கருதுகிறோம். நமது மருத்துவர்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகை மருந்துகளை மட்டுமே பயன்படுத்தினர், ஆனால் காடுகள் குறையவில்லை. ஏனென்றால் அவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்டதை விட பத்து மடங்கு பயிர் செய்தார்கள். இந்த நன்றியுணர்வு நமது நடத்தையின் தனிச்சிறப்பாகும். நாம் கலாச்சாரம் என்று அழைப்பது நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளும் பாரம்பரியம். இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. நாம் கலாச்சாரம் என்று சொல்வது இந்த நடைமுறை பாரம்பரியத்தைத்தான். நமது கலாச்சாரம் என்பது, மனிதர்களை மனித வாழ்க்கை நடத்த பாடுபடும் கலாச்சாரம். மற்ற கலாச்சாரங்கள் மனிதனை ஒரு சமூக விலங்காக பார்க்கின்றன. மனிதன் எல்லா உயிரினங்களிலும் மிக உயர்ந்தவன் என்பதாலும், உயர்ந்தவனாக இருப்பதென்றால் அதிக பொறுப்பை அவன் கொண்டிருப்பதாலும் அனைத்தையும் இணைத்துக்கொண்டு இயங்க வேண்டும்.

வெளி உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் உருவாக்கம் மற்றும் அழிவு சுழற்சி இருப்பதை நவீன விஞ்ஞானம் கூட ஏற்றுக்கொள்கிறது. வெளிப்புற முயற்சிகள் பலனளிக்காதபோது நம் முன்னோர்கள் இந்த கேள்விக்கான பதிலை தங்களுக்குள் தேடத் தொடங்கினர். வெளி உலகம் என்பது ஒரு நித்திய உண்மையின் வெளிப்பாடு என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். வெளிப்புற வடிவங்கள் மாறுகின்றன, ஆனால் அது வெளிப்படுத்தும் உள் உண்மை மாறாது. நாம் தோற்றங்களைக் கைவிட வேண்டும், ஆனால் நித்தியத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் துரதிஷ்டவசமாக இந்த பாரம்பரியத்தை மறந்து அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டனர். இதனுடன் மோசமான நடத்தை பிரச்சினையும் சேர்ந்துள்ளது”என தெரிவித்தார்.

அமைச்சர் சுதிர் முங்குந்திவார் பேசுகையில், “நமது கலாச்சாரம் கேள்விகளை எழுப்புவது அல்ல, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது. நமது கலாசாரம் பல திசைகளிலும் தாக்கப்பட்டு வருவது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. நமது கலாச்சாரத்தை பரப்புவதற்கு நாம் பாடுபட வேண்டும்” என்றார். டாக்டர் டெக்ளூர்கர், “பாரதக் கலாச்சாரம் என்பது உலகில் உடைக்கப்படாத கலாச்சாரம். பாரதத்தைப் போல பழமையான கலாச்சாரம் எதுவும் இல்லை. வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள சிலைகள் இப்போது அருங்காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன, ஆனால் நமது சிலைகள் இப்போதும் நம் இதயங்களிலும் கோயில்களிலும் உள்ளன. நமது கலாச்சாரம் நித்தியமானது (சனாதன்) ஆனால் அது எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் (நித்ய நுதன்)” என விவரித்தார். டாக்டர் உமா போதாஸ் பேசுகையில், “இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவும் பிரசாத் பிரகாஷன் நிறுவப்பட்டது. எங்கள் நிறுவனர் ஒய்.ஜி ஜோஷி யின் அதே கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here