ஜெய் ஹிந்த் ஒலி ஒளி காட்சி

0
181

செங்கோட்டையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் ஹிந்த்’ ஒலி, ஒளிகாட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றுதொடங்கி வைத்தார். நிகழ்த்துக்கலை படவிளக்கம், நேரடி திரைப்படக் காட்சி, நடிகர்கள், நடன கலைஞர்கள் மற்றும் பொம்மலாட்டம் மூலம் கடந்த 75 ஆண்டுகால நடைமுறைகள் மற்றும் 17ம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலான பாரதத்தின் வீரம் மற்றும் வரலாற்றின் பெருமைமிகு விளக்கக்காட்சியாக இது அமையும். மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு மணி நேர ஒலி, ஒளிகாட்சிகள்; ‘ஜெய் ஹிந்த்’, மராட்டியர்களின் எழுச்சி, 1857 விடுதலைப்போர், இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி மற்றும் ஐ.என்.ஏ வழக்கு உள்ளிட்ட பாரத வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை விளக்கும். நடனக் கலைஞர்கள் மற்றும் பொம்மலாட்டங்கள். நௌபத்கானா முதல் திவான் இ ஆம் முதல் திவான் இ காஸ் வரை செங்கோட்டையில் உள்ள பல்வேறு நினைவுச்சின்னங்களில் 3ம் பகுதி நிகழ்ச்சி காட்சிப்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பொதுமக்களுக்கு ஒரு முறை 700 பேர் காணும்வகையில் இருக்கை வசதியுடன் காட்சிப்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here