ஸ்ரீராம ஜென்மபூமி கட்டுமானப் பணிகள்

0
248
  1. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பின் செயலாளரான சம்பத் ராய், செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்த பணியில் 550க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் தினமும் 2 ஷிப்ட்களில்  பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலையின்படி கோயிலில் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோயிலின் முதல் தளப்பணிகள் 2023ம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். வரும் டிசம்பர் 21 மற்றும் 2024ம் ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையே கோயிலில், ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும். 1949ல் கண்டெடுக்கப்பட்ட ராம் லல்லா சிலை மற்றொரு பிரம்மாண்ட புதிய ஸ்ரீராமர் சிலை என கோயிலில் இரண்டு ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்” என்று கூறினர். இதையடுத்து ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் திட்ட மேலாளரான ஜெகதீஷ் அஃப்லே பேசுகையில், “தினமும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் திலகம் இடுவது போல விழும்படி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here