பாரதத்தின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டிபி.சி, தற்போது ஜார்க்கண்டில் உள்ள 660 மெகாவாட் வடக்கு கரன்புரா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் ‘யூனிட்டின் சோதனைச் செயல்பாட்டை வெற்றிகரமாக முடித்ததன் மூலம் அதன் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 71 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக (71,544 மெகாவாட்) உயர்ந்துள்ளது. மிகவும் திறமையான சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த அனல் மின் திட்டம், மற்ற வாட்டர் கூல்டு கன்டென்சருடன் (WCC) ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு நீர் செலவு கொண்ட காற்று குளிரூட்டப்பட்ட மின்தேக்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தவிர, என்.டி.பி. சி நிறுவனம் தற்போது மாசில்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் மூலம் அதன் எரிசக்தி அமைப்பை பசுமையானதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 2032ம் ஆண்டிற்குள், நிறுவனம் 60 ஜிகாவாட் மின்திறனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து பெற திட்டமிட்டுள்ளது, இது அதன் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறனில் சுமார் 45 சதவீதமாகும். தற்போதைய நிதியாண்டில் 1,242 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை என். டி.பி.சி நிறுவியுள்ளது. இதன் மூலம் என்.டி.பி.சி குழுமமானது 4.8 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை பல்வேறு நிலைகளில் செயல்படுத்து வருகிறது. மேலும், 7.3 ஜிகாவாட் மின் உற்பத்திகான டெண்டர் விடும் செயல்முறையும் துவங்கியுள்ளது.