இந்திய கடற்படையின் 2023-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய போர் பயிற்சியான ட்ரோபெக்ஸ் கூட்டுப்பயிற்சி இந்தியாப் பெருங்கடல் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கடற்படையின் அனைத்துப் பிரிவுகளும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் இந்த பயிற்சியில் பங்கெடுத்துள்ளனர்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த மூன்று மாத ட்ரோபெக்ஸ் 23 பயிற்சியில், நிலம் மற்றும் நீரில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய கடற்படை உபகரணங்கள் மட்டுமல்லாமல், விமானப்படையின் போர் விமானங்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பயிற்சியில், துறைமுகத்திலும், கடற்பகுதியிலும், ஆயுதத் துப்பாக்கி உள்ளிட்ட கடற்படைத் தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, பல்முனைத் தாக்குதல் சூழ்நிலையை கூட்டாக எதிர் கொள்வதற்கான பலத்தை இந்திய கடற்படைக்கு அளிக்கும் வகையில், இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.