காஞ்சி அத்திவரதரை அவமதித்த கோவில் முன்பு கடை வைத்திருக்கும் திக காரர்.

0
972

காஞ்சியில் அத்திவரதர் படத்திற்கு செருப்பு வைத்த தேங்காய் கடைக்காரர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, கோவில் அருகில் சுவாமி அர்ச்சனைக்காக தேங்காய் கடை வைத்திருக்கும் பூபதி, 55, என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்பு மாட்டி, அதில் அத்தி வரதர் புகைப்படத்தை வைத்திருந்தார்.
இதைப் பார்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரரிடம், ‘செருப்பில் சுவாமி படத்தை ஏன் வைத்துள்ளீர்கள்’ எனக் கேட்டனர். அதற்கு அவர், ‘என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் தி.க.,காரன்’ எனக் கூறியுள்ளார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்து நிறுத்தி, கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here