ஜெய்சங்கருக்கு மைக் பாம்பியோ புகழாரம்

0
221

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் சி.ஐ.ஏ தலைவராகவும் பதவி வகித்தவர் மைக் பாம்பியோ. இவர் தனது அனுபவங்களை தொகுத்து Never Give an Inch: Fighting for the America I Love (ஒரு இன்ச் விட்டுக்கொடுக்கமாட்டோம்; நான் நேசித்த அமெரிக்காவுக்கான போராட்டம்) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுதியுள்ளார். அதில் ஒன்றாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடான உறவு குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் 2014 முதல் சுஷ்மா சுவராஜ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். அவர் 2019ல் அவர் உயிரிழந்த நிலையில் ஜெய்சங்கர் பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பாரதத்தின் இந்த இரண்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குறித்தும் மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாரதத்தின் தரப்பை பொறுத்தவரை எனது உண்மையான எதிர்தரப்பான பாரதத்தின் வெளியுறவுத்துறை கொள்கை அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கிய நபருடன் (சுஷ்மா சுவராஜ்) நான் அதிகமாக பணியாற்றவில்லை. மாறாக பிரதமர் மோடியின் மிகவும் நெருக்கமாக உள்ள நம்பகத்தன்மை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தான் நான் மிகவும் நெருக்கமாக வேலை செய்தேன். அடுத்ததாக புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வந்த வெளியுறவுத்துறை அமைச்சரே எஸ். ஜெய்சங்ரை நாங்கள் வரவேற்றோம். அவரை விட சிறந்த எதிர்தரப்பு வெளியுறவுத்துறை அமைச்சரை நான் கண்டிருக்க முடியாது. நான் அவரை மிகவும் நேசித்தேன். அவர் பேசும் 7 மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அவரது ஆங்கிலம் என் ஆங்கிலத்தை விட சிறப்பாக இருந்தது. ஜெய்சங்கர் சிறந்த தொழில்முறை அனுபவம் மிக்கவர். தனது நாட்டையும், தனது தலைவரையும் பாதுகாக்கும் ஒரு வெறித்தனமான பாதுகாவலர் ஜெய்சங்கர்” என புகழ்ந்துள்ளார்.

இதனிடையே சுஷ்மா ஸ்வராஜ் குறித்த பாம்பியோவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவருடன் தனக்கு தனித்துவமான உறவு இருப்பதாக கூறினார். “மைக் பாம்பியோவின் புத்தகத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பற்றி குறிப்பிடும் ஒரு பத்தியை நான் பார்த்தேன். நான் எப்போதும் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவருடன் தனித்துவமான அன்பான உறவைக் கொண்டிருந்தேன். மைக் பாம்பியோவின் இத்தகைய அவமரியாதைக்குரிய பேச்சு வழக்கை நான் கண்டிக்கிறேன்,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here