உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராம ஜன்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஶ்ரீராமபிரானின் கோயிலின் மூலஸ்தானத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கவுள்ள பகவான் ஸ்ரீராம் லால்லா மற்றும் சீதாதேவி ஆகியோரின் விக்கிரகங்கள் வடிப்பதற்காக, விசேஷமான இரண்டு பாறைகளை நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது நேபாள நாட்டு அரசு. கண்டகி நதியில்தான் புனிதமான சாளகிராமம் கிடைக்கிறது. நாடெங்கிலும் உள்ள வைணவர்கள் வீட்டில் சாலகிராமத்தை வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் உள்ளது. இந்த சாளகிராமம் மஹா விஷ்ணுவின் வடிவமாகவே கருதப்படுகிறது.