தேசத்தின் உள்கட்டமைப்புவசதிகளை சர்வதேச தரத்தில்மேம்படுத்தும் வகையிலும் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கிலும் ரூ. 100 லட்சம்கோடியில் ‘கதி சக்தி’ திட்டம்அமல்படுத்தப்படும், புதிய பொருளாதார மண்டலங்களைஅமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி கடந்த 2021ல் அறிவித்தார்.
இதற்காக ரயில்வேதுறை, நெடுஞ்சாலைகள் துறை, மின்சாரம், தொலைத்தொடர்புத்துறை, கப்பல்துறை, விமானப் போக்குவரத்துத் துறைஉள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள்இணைந்து செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் தெற்குரயில்வேயில் உள்ள அனைத்து 6 கோட்டங்களிலும் உள்ளபயணிகள் வசதி, போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறுஉள்கட்டமைப்புப் பணிகளை செயல்படுத்த அதிகாரிகள்கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ரயில்வேகோட்டத்தில் அமைக்கப்பட்ட குழு சார்பில், சென்னைஎழும்பூர் ரயில் நிலையத்தை ரூ. 735 கோடி மதிப்பில் சர்வதேசதரத்தில் மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன.