பேராசிரியரின் சட்டவிரோத நடவடிக்கை

0
209

கருத்துரிமை, ஊடக சுதந்திரம் என்ற போர்வையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு புறம்பாக பி.பி.சி தயாரித்து வெளியிட்டசர்ச்சைக்குரிய ஆவணப் படத்தை மத்திய அரசு அண்மையில் தடைசெய்தது. சில அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் எல்லாம் அதனை பதிவிறக்கம் செய்து ஆங்காங்கு வெளியிட்டு மலிவான அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன. இந்த சூழலில், தடை செய்யப்பட்ட அந்த ஆவனப் படத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்சமூகவியல் துறையில் பேராசிரியர் சாம்வேல் ஆசிர்ராஜ், மாணவர்கள் மத்தியில் திரையிட்டார், இடதுசாரிகள் ஆதரவு இந்திய மாணவர் சங்கமான எஸ்.எப்.ஐ சார்பாக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக விடுதியில் இந்த ஆவனப்படம் திரையிடப்பட்டது என்ற செய்தியும் அதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பேராசிரியர் சாம்வேல் ஆசிர்ராஜை பணி நீக்கம் செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊட்கங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here