ஹெச்.எஸ்.எஸ் தேஷ் பிரேம் திவஸ்

0
121

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் பாரதத்தில் பராக்கிரம தினம் (பராக்ரம திவஸ்) என கொண்டாடப்படுகிரது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ராஷ் பிஹாரி போஸ் போன்ற புரட்சியாளர்களின் நீண்டகால ‘தொடர்பு காரணமாக ஜப்பானிலும் இந்த பராக்ரம தினம் பெரும் முக்கியத்துவத்தைக் பெற்றுள்ளது. பராக்ரம் திவாஸின் நினைவாக, அங்குள்ள ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் (ஹெச்.எஸ்.எஸ்) அமைப்பு, ஜப்பானில் ஜனவரி 21 அன்று யோகோஹாமாவில் உள்ள தோகைச்சிபாவில் ‘தேஷ் பிரேம் திவாஸ்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான பாரதத் தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் முதன்மை செயலாளர் மனோஜ் சிங் நேகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மிட்சுரு தோயாமா சாமாவின் கொள்ளுப் பேரன் ஷிந்தாரோ டோயாமா சான் மற்றும் ஷிகேமாரு சுகியாமா சாமாவின் கொள்ளுப் பேரன் மிட்சுமாரு சுகியாமா சான் ஆகியோர் வீடியோ செய்திகள் மூலம் தங்கள் வாழ்த்துகளை அனுப்பினர். பாரதம் தழைத்தோங்க, செழிக்க பிரார்த்தனை மற்றும் குழு பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஹெச்.எஸ்.எஸ் அமைப்பின் ஜப்பான் நாட்டு செயலாளர் அஜய் நருலா, ஹெச்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டில் ஜப்பானில்மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், ரத்த தான முகாம் மற்றும் துணி சேகரிப்பு இயக்கம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசபக்தி பாடல்கள், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஷ் பிஹாரி போஸின் வாழ்க்கை பற்றிய விளக்கக்காட்சிகள் குழந்தைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. நிகழ்வின் சிறப்பம்சமாக ஹெச்.எஸ். எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவகர்கள் மற்றும் சேவிகாக்களால் ஐ.என்.ஏ அணிவகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. பாரதத் தூதர் சிபி ஜார்ஜ் தனது உரையில், வெளி நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு பாரதத்தினரும் நமது நாட்டின் தூதர்களாக இருப்பதை வலியுறுத்தினார். நீண்டகால குடும்ப உறவுகளை நிலைநிறுத்தும் பாரத மக்களின் இயல்பை எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here