அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி

0
92

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் முக்கியக் கடமையும், பொறுப்பும் உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ‘MODI@20’ சீர்திருத்தச் சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள் மற்றும் ‘அம்பேத்கர் & மோடி’ சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகள், செயல்பாட்டாளர்களின் செயலாக்கம் ஆகிய புத்தகங்களின் தமிழ் பதிப்பை வெளியிட்டு தமிழ்நாடு ஆளுநர் பேசினார். சிந்திக்கும் திறன் கொண்ட மாணவர்கள், புத்தகங்களில் உள்ள முக்கியமான தகவல்களைப் படித்து, தேசத்தின் விதியை நோக்கிய தேசத்தின் பயணத்தின் ஒரு பகுதியாக அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் திரு நரேந்திர மோடி என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, உலகம் முழுவதும் நிலையானதாகவும், சமத்துவமாகவும் மாறும் நிலை ஏற்படும் என்றார். மேலும் வலுவாக வளர உலகை ஒன்றிணைக்கும் தெய்வீகக் கடமையை நிறைவேற்றியவர் பிரதமர். பூமி மட்டுமே பரிணாமக் கிரகம் என்றும், முழுப் படைப்பும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஒற்றுமையின் ஒளியைக் கொண்டிருந்த ஒரே நாடு பாரதம் என்றும் ஸ்ரீ அரவிந்தர் தெரிவித்தார். நாம் அனைவரும் இந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள். ஒரு குடும்பமாக உலகைக் காப்பாற்ற வலிமையாக வளர வேண்டியது பாரதத்தின் கடமை. இது தெய்வீக கட்டளை. இது தெய்வீகக் கடமை. பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீகக் கடமையை நிறைவேற்றி வருகிறார். 150 நாடுகளுடன் கொவிட்-19 க்கான தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்ட நமது விஞ்ஞானிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா எழுச்சி பெறும் போதெல்லாம், முழு உலகமும் இந்தியாவை நோக்கி நகர்கிறது. உலகமே ஒரே குடும்பம் என்பதை பிரதமர் வலியுறுத்துவதால், இப்போது உலகம் முழுவதும் வசுதைவ குடும்பகம் என்ற நிலைப்பாடு பரவலாக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தவர், அவர் ஒரு சிறந்த தேசியவாத தலைவர் என்று கூறினார். ஆனால் அவர் அரசியல் அணிதிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டார். எப்போதெல்லாம் பிரிவினை என்பது பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்ததோ அப்போதெல்லாம் டாக்டர் அம்பேத்கர் அதற்கு எதிராக ஒரு பாறையைப் போல உறுதிப்பாட்டுடன் நின்றார். பிரதமர் திரு மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு, கழிப்பறை, குழாய் மூலம் நல்ல குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நமது தேசத்தின் வளர்ச்சிக்காக மக்களை ஒன்று சேர்ப்பதே அடிப்படை மாற்றமாகும். எனவே இந்தியா வல்லரசாக மாறும் பொற்காலமான அமிர்த காலத்திற்கான பாதையை அமைப்போம் என்றார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைப் பிரதமர் திரு மோடி செயலாற்றி வருகிறார் என்று மத்திய தகவல்&ஒலிபரப்பு , மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.

மோடி@20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் &மோடி சீர்திருத்தச் சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள் என்ற புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேசும்போது, டாக்டர் அம்பேத்கர் அவர்களின்தற்சார்பு இந்தியா என்ற உயர்ந்தகனவைபிரதமர் திரு மோடிநனவாக்கி வருகிறார்.அன்றைய காலகட்டத்திலேயேபொருளாதார நிபுணத்துவம், நீர் நிலை பாதுகாப்பு, எரிசக்தி போன்ற பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைள் குறித்த அவருடைய பார்வைகளை பிரதமர் திரு மோடி தற்போது செயல் வடிவம் கொடுத்து வருகிறார்.உதாரணத்திற்கு நர்மதா நதியை சீரமைத்து அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்ற சாதனை பிரதமரையே சாரும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீரை குழாய் மூலம் வழங்கப்பட்டது. சமூக சீர்சிருத்தங்களுக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் செயலாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த புதுதில்லி, நாக்பூர், இந்தூர் உட்பட 5 இடங்களை புனிதத்தலமாக பிரதமர் திரு மோடி அறிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் பயன்பாட்டை பயனாளிகள் நேரடியாக பெறும் வகையில் பிரதமர் திரு மோடி ஜன்தன் திட்டம் மூலம் வழிவகை செய்துள்ளார்.மகளிர் சக்தி திட்டம் கீழ் கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட் ஆகும்.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், இந்திய தொழில்நுட்பக்கழகம், இயக்குனர் பேராசிரியர் வீ காமகோடி ஆகியோரும் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களின் சிறப்பு இயல்புகளை பற்றி விரிவாகப்பேசினார். முன்னதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ஆர் வேல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.இறுதியில் பத்திரிகை தகவல் அலுவலகம் &மத்திய மக்கள் தொடர்பகம், கூடுதல் தலைமை இயக்குனர் மா அண்ணாதுரை நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here