வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக அசாமில் ஊடுருவி பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, வழிபாட்டுக்கு என மஸ்ஜித் எழுப்புவது, பிணங்கள் புதைத்திட (மஜார்) கல்லறை கட்டி காடுகளைக் கைப்பற்றுவது, மதரஸா போர்வையில் நகர்ப் பகுதிகளில் அரசு நிலத்தை வளைத்துப் போடுவது தொடர் கதையாக நடைபெற்று வந்தது.
ஹிந்து தர்ம ஸ்தாபனங்களுக்குரிய இடங்களும் கூட இந்த ஆக்கிரமிப்பில் இருந்து தப்பவில்லை. அசாம் அரசு சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முழு வீச்சில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் புர்ஹசாபோரி (Burhachapori) வனத் துறைக்குரிய 1892 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இக்காட்டினை ஆக்கிரமித்து 11,610 வங்கதேசத்தவர்கள் வசித்து வந்தனர். 3மசூதிகள், 3 மதரஸா, 2 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்துள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றிட 100க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதே போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றிடும் பணியானது டெல்லி, காஷ்மீர், உத்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.