புயலாய் திரும்பி வந்த ஹனுமன்

0
65

பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் லீட் இன் ஃபைட்டர் டிரெய்னர் ஜெட் விமானத்தின் (HLFT 42) மாதிரி இடம் பெற்றிருந்தது. அந்த விமான மாதிரியின் வால் பகுதியில், ஹனுமனின் உருவம் இடம் பெற்றிருந்தது. இந்த போர் விமானத்தின் வாலில் பொறிக்கப்பட்ட ஹனுமான் உருவம் அங்கு வந்தவர்களின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியது. ஒருவரின் கடமைக்கான சக்தி மற்றும் பக்தியைக் குறிக்கும் விதமாக ஹனுமனின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் HLFT 42 விமானம் HLFT 24 மாருத் என்ற போர் விமானத்தின் வாரிசாகக் கருதப்படுகிறது. இது 1971ம் ஆண்டு பாரத பாகிஸ்தானின் லோங்கேவாலா போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் பல டாங்கிகளை அழிக்க பாரதப் படைகளுக்கு உதவியது. அதனுடன் ‘புயல் வருகிறது’ (The storm is coming) என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், ஒருசிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அது அடுத்த நாளே அது அகற்றப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹனுமனின் உருவம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கண்கட்சியின் கடைசி நாளன்று விமானத்தின் வால் பகுதியில் ஹனுமனின் உருவம் மீண்டும் இடம்பெற்றது. இதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்தனர். இது குறித்து ஹெச்.ஏ.எல் தலைவர் சி.பி. அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த உள்நோக்கத்துடனும் இது பதிக்கப்படவில்லை, எந்த உள்நோக்கத்துடனும் அகற்றப்படவும் இல்லை. எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் நிகழ்ச்சி நிரல் வெற்றிகரமாக இயங்குவதைப் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார். அவரது மற்றொரு அறிக்கையில், “விமானத்தின் வலிமையைக் காட்டுவதற்காகவே ஹனுமன் படத்தை வைத்தோம். ஆனால், சர்ச்சைக்குப் பிறகு அதை நீக்க முடிவு செய்தோம். எங்கள் பயிற்சி விமானமான மாருத் உடன் இணைப்பை ஏற்படுத்த யோசனை இருந்தது. இருப்பினும், அதைச் சுற்றி சர்ச்சைகள் வெடிப்பதை நாங்கள் கண்டோம். திட்டம் முதல் கட்டத்தில் உள்ளது. நாங்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here