தேசத்தலைவர்கள் படத்தை வைக்கக் கூடாது – ஜே.என்.யூ-வில் கம்யூனிஸ்ட்களின் வெறித்தனம்

0
217

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பிப்ரவரி 19 அன்று, மாலை 7.30 மணிக்கு , ABVP சார்பில் சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது . இதற்கு உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது .

சுமார் 8.30 மணிக்கு நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்த கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கமான SFI சேர்ந்தவர்கள், சிவாஜி மற்றும் மஹாராணா பிரதாப் படங்களை உடைத்தார்கள்.  இதற்கு ABVP எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதிலுக்கு ‘இங்கே கார்ல் மார்க்ஸ், லெனின் படம் மட்டுமே வைக்கலாம்’ என SFI மாணவர்கள் கூறியுள்ளனர் . தொடர்ந்து ABVP அமைப்பில் உள்ள மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதையடுத்து இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சியில், வேண்டுமென்றே உள்ளே நுழைந்து SFI தாக்குதல் நிகழ்த்தியுள்ளது, கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here