பாயும்புலி என்ற பெயர் இவருக்குத் தான் பொறுத்தமானது. சுதந்திரப் போராட்டத் தில் ஆங்கிலேயர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்கக் கூட முடியாத அளவுக்கு அவர் களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பராக்ரமசாலி சந்திரசேகர ஆஸாத் நினைவு தினம்.
பிரிட்டிஷ் காவல் துறையினர் இவர் மீது ஒரு கண் வைத்துக் காத்திருந்தனர். வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ அப்போது உயிருடனோ அல்லது பிணமாகவோ ஆஸாத்தைப் பிடித்திட வேண்டும்.
அலஹாபாத் ஆல்ஃப்ரெட் பூங்காவில் 2 நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந் தார். காவல் துறையினருக்கு உளவாளி யாக செயல்பட்டு வந்த த்ரோகி ஒருவன் கொடுத்த தகவலினால் பூங்காவைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் சரணடையு மாறு உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் புலி பாயத் தொடங்கியது. புலியின் தாக்குதலுக்கு 3 காவலர்கள் இரையாகினர்.
தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு போலீ சாரால் சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த சந்திரசேகர ஆஸாத் தனது முடிவைத் தானே முடித்துக் கொண்டார்.
ஆம் ஒரு அந்நியன் கையால் சாவதா? அதற்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என்ற முடிவுடன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பாரத மாதாவின் காலடியில் நறு மலராக அர்ப்பணம் ஆனார்.
எதிரிகளை விட நம்மிடையே இருந்த த்ரோகிகளின் வஞ்சகச் செயல்கலாளே நாம் அடிமையானோம்.
சூரிய சந்திரன் ஒளிவீசும் வரை சந்திர சேகர ஆஸாத்தின் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.