அக்னிபத் திட்டம் செல்லும்

0
177

குறுகிய கால அடிப்படையில் ராணுவத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்யும் புரட்சிகரமான ‘அக்னிபத்’ திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் எதிர்த்தன. இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்தீஸ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், ‘நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு படையை மேம்படுத்தவும் தான் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும்’ என்று உத்தரவிட்டதுடன் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here