திருச்சி மலைக்கோட்டை கோவில் வரலாறு

3
444

நாம் இன்று பார்க்க போகும் புனிததலம் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் மலைகோட்டை கோவில். நாற்புறமும் கோட்டையால் சூழப்பட்டு நடுவில் மலையால் உள்ளதால் இதற்கு மலைகோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை உச்சிபிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில்  மற்றும் தென்கைலாயம் என்றும் கூறப்படுகிறது.

275 அடி உயரம் கொண்ட இந்த கோவில், பல்லவர் காலத்துடையது என்றும் இதனை பராமரித்து கோவிலை முழமையாக கட்டி தெப்பகுளத்தை வெட்டியது நாயக்கர் மன்னர்கள் என்றும் கூறப்படுகிறது.

மலைகோட்டையில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்த நிலவியல் அறிஞர்கள் 100  கோடி ஆண்டுகள் பழமையானது என கூறுகின்றனர். இங்கு பல்லவர் காலத்து குகைகள், பழங்காலத்து சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன.

உச்சிபிள்ளையார் வரலாறு.

மலைகோட்டையில் உள்ள பிள்ளையார் புராண கதைகளின் படி ராமனுடன் நட்பு பூண்ட இராவணன் தமையன் வீபிஷனன் ராமன் பட்டாபிஷேக விழாவிற்கு சென்று இருந்தார். அங்கு விபிஷனுக்கு விஷ்ணு சிலை கொடுக்கப்பட்டது. அதனை கிழே வைத்தால் அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என்பதை அறிந்த விபிஷணன் விஷ்ணு சிலையை ஒரு குழந்தையுடன் கொடுத்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அதனை அந்த குழந்தை கீழே வைத்துவிட்டது. இதனை அறிந்த வீபிஷனன் அந்த குழந்தையை தலையில் கொட்டினார். அந்த குழந்தை விநாயகர் என அறிந்த விபீஷணன் மன்னிப்பு கேட்டார். அந்த விநாயகர் தான் உச்சிபிள்ளையாராக வீற்றிருக்கிறார். பிரதிஷ்டையான விஷ்ணு தான் இன்று உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்.

தாயுமானவர் வரலாறு

இங்கு உள்ள தாயுமானவருக்கு பெயர் காரணம். தாயின் வருகை எதிர்பார்த்து காத்து இருந்த கர்ப்ப ஸ்திரியை காக்க சிவபெருமான் தாயின் உருவம் கொண்டு அந்த கர்ப்ப ஸ்திரியை காப்பாற்றியதால் சிவபெருமான் (தாயும் ஆனவர் சிவபெருமான் தாயுமானவர் ஆனார்.

3 COMMENTS

  1. Hey there just wanted to give you a brief heads up and let you know a
    few of the pictures aren’t loading correctly. I’m not sure why but I
    think its a linking issue. I’ve tried it in two different web
    browsers and both show the same outcome.

  2. Hey! I know this is kind of off topic but I was wondering if you knew
    where I could locate a captcha plugin for my comment form?
    I’m using the same blog platform as yours and I’m having difficulty finding
    one? Thanks a lot!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here