பாரதத்தில் எப்பொழுதெல்லாம் ஹிந்துக்களின் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அப்போதெல்லாம் கலவரங்கள், வகுப்புவாத மோதல்கள் நடந்துள்ளன. இப்போது, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கியும் இதில் இணைந்துள்ளது. ஹோலி கொண்டாட்டங்கள் குறித்த ஸ்விக்கி வைத்த விளம்பர பலகையால் நெட்டிசன்கள் பலர் எரிச்சல் அடைந்துள்ளனர். அதில், ஹோலியின் போது முட்டைகள் பயன்பாடு குறித்து தேவையர்ற வகையில், ஹிந்துக்களின் பண்டிகையி மூக்கை நுழைக்கும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில், முட்டியயை ஆம்லெட் போடலாம், ஆஃப்பாயில் போடலாம். ஆனால், அவை ஒருவரின் தலையில் அடித்து நொறுக்குவதற்காக அல்ல, நுகர்வுக்காக மட்டுமே என கூறப்பட்டுள்ளது. ஸ்விக்கி செயலியின் இந்த விளம்பரம் வைரலானதை அடுத்து, வட மாநிலங்களில் பலர் உடனடியாக ஸ்விக்கி செயலியை தங்கள் அலைபேசிகளில் இருந்து நீக்கி வருகின்றனர். பல சமூக ஊடகப்பயனர்கள், “ஈத் பண்டிகையின் போது ஸ்விக்கி, ஆடுகளை வெட்டுவதைத் தவிர்க்க அவர்களை வலியுறுத்துமா அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மரங்களை வெட்ட வேண்டாம் என்று கிறிஸ்தவர்களை வற்புறுத்துமா? உங்கள் ஹிந்து எதிர்ப்பு வெறியை எங்கள் பண்டிகைகளில் காட்ட வேண்டாம். நாங்கள் விரும்பும் விதத்தில் ஹோலியை கொண்டாடுவோம். கோடிக்கணக்கானோர் கொண்டாடும் ஒரு ஹிந்துப் பண்டிகையை ஸ்விக்கி திட்டமிட்டே அவமரியாதை செய்கிறது. மற்ற ஹிந்து அல்லாத பண்டிகைகளில் ஏன் இத்தகைய ஞானோதயம் அவர்களுக்கு வருவதில்லை? ஸ்விக்கி, வேண்டுமென்றே செய்த இந்த தவறுக்காக ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஹோலி என்பது மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாகும், ஆனால் ஸ்விக்கியின் இத்தகைய செயல்கள் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகின்றன. அந்த நிறுவனம் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். பல்வேறு சமூகங்களுக்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம், அனைவருக்கும் மதிப்பளிப்பது முக்கியம்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.