பாரத நாட்டு எல்லைப்பகுதிகள் முழுவதும் தகர்க்க முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

0
186

பாரத எல்லைப் பகுதி முழுவதும் இந்த ஆண்டு முடிவுக்குள் வேலிகள் வைத்து அடைக்கப்பட்டு விடும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.


எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நம் நாட்டின், 7,500 கி.மீ., நீள எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வேலிகள் போடப்பட்டு அடைக்கப்பட்டு விட்டன. வெறும் 3 சதவீத எல்லைப் பகுதி மட்டும் வேலிகள் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அது, பயங்கர வாதிகள் ஊடுருவுவதற்கும், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவதற்கும் உதவியாக உள்ளது.

அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள், நம் எல்லைப் பகுதி முழுதும் வேலிகள் வைத்து அடைக்கப்பட்டு விடும். எல்லைப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு அதனை கருத்தில் வைத்து உடைக்க அல்லது தகர்க்க முடியாத அளவுக்கு புதிய வகையிலான எல்லை வேலிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here