குரோனா காலத்தில் விலங்குகளுக்கு உணவளித்த முன்னாள் ராணுவ மேஜருக்கு பிரதமர் மோடி பாராட்டு.

0
124

குரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் பிரமிளா சிங். இவர் குரோனா பரவல் துவங்கியது முதல் ஒன்றரை ஆண்டுகளாக ஆதவற்ற தெருக்களில் சுற்றி வரும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி பிரமிளா சிங்கை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா ஊரடங்கால் தெருவில் சுற்றிய விலங்குகள் உணவு கிடைக்காமல் தவிப்பதை அறிந்து அவற்றுக்கு உதவிய உங்களின் நடவடிக்கை சமுதாயத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கொரோனா காலம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கடினமானதாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில் ஆதரவற்ற விலங்குகளின் தேவைகளை உணர்ந்து அவற்றுக்காக தனிப்பட்ட முறையில் பணியாற்றியது பாராட்டுக்கு உரியது, என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here