2022-2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.13,399 கோடியாக அதிகரித்துள்ளது.
சிறப்பு ரசாயனம், மூலக்கூறு, கருவி, தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய வெடிமருந்து பட்டியலை ஏற்றுமதி செய்வதற்கு பாதுகாப்பு உபகரண உற்பத்திப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இந்த ஏற்றுமதிக்கான அங்கீகாரம் இத்துறையால் வெளியிடப்பட்ட தர நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த உபகரணங்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.4,682 கோடியாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடியாகவும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடியாகவும் இருந்துள்ளது. இதே போல் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடியாகவும், 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.12,815 கோடியாகவும் இருந்தது.