மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி வழியாக புத்தாண்டு தினத்தன்று (மார்ச் 22) திறந்து வைத்தார்:
பாரதத்தின் மிகப் புகழ் பெற்ற சாரதா (பீடம்) தேவி கோயில் 1947 இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சிறை பட்டுவிட்டது. பாகிஸ்தான் உள்ள மத அடிப்படை வாதிகள் சாரதா தேவி கோயிலை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர்.
1947 முதல் ஶ்ரீசாரதா பீடம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள பாக். ஆக்கிரமிப்புப் பகுதியான நீலம் பள்ளத்தாக்கிற்குள் சென்றுவிட்டது.
ஶ்ரீநகரில் இருந்து 130 கிமீ. தூரத்திலும், பாக். ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் தலை நகரான முசாஃபராபாத்திலிருந்து 150 கிமீ தூரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 6499 அடி உயரத்தில் கிஷன் கங்கா நதிக் கரையில் அமைந்துள்ளது.
பிரிவினைக்கு முன்பு சாரதா பீடம் சென்று வர யாத்திரீகர்கள் அடிவாரமான தீத்வாலில் இருந்துதான் புறப்படுவர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள புராதனமான ஶ்ரீ சாரதா தேவி கோயிலுக்கும் பக்தர்கள் சிலர் பாக். வழியாக சென்றுவரத் தொடங் கியுள்ளனர்.
குருநானக் தேவ் அவர்கள் தனது கடைசி 18 ஆண்டுகளைக் கழித்த கர்த்தார்பூர் பஞ்சாப்பையொட்டி எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது.
கர்தார்பூருக்கு புனித யாத்திரை சென்று வர பாகிஸ்தானுடன் பாரத அரசு உடன் படிக்கை செய்து கொண்டுள்ளது போன்று ஶ்ரீசாரதா தேவி கோயிலுக்கும் சென்று வர வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) குப்வாரா மாவட்டத்தில் உள்ள தித்வாலில் புதிய ஶ்ரீ சாரதா தேவி கோயில் நேற்று பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
ஶ்ரீருங்கேரி ஶ்ரீசாரதா பீடாதிபதி ஶ்ரீ சங்கராச்சாரியார் சாரதா தேவி விக்ரஹம் அனுப்பி வைத்தார்.
ஶ்ரீ சாரதா பீடம் புகழ் பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். சர்வக்ஞ பீடம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
ஆதி சங்கரர் இப்பீடத்திற்கு வருகை புரிந்துள்ளார். மிகப் பெரிய ஆலயம், பல்கலைக்கழகம் இருந்த இடம் இது.
உலகின் மிகத் தொன்மையான சரஸ்வதி லிபி (எழுத்துக்கள்) பயன்பாட்டில் இருந்துள்ளது. காஷ்மீரின் மொழி சரஸ்வதி மொழியாகும்.
மிகச் சிறந்த வேத உபநிஷத அறிஞர் கள், கல்வியாளர்கள் இருந்த இடம் சாரதா தேவி பீடம்.
சதி தேவியின் உடல் 51 பகுதிகளாகப் பிரிந்து சிதறிய போது தேவியின் வலது கை வீழ்ந்த இடம் சாரதா பீடமாக போற்றி வணங்கப்பட்டு வருகிறது.
இந்துக்களின் நீண்ட நாளையக் கனவான சாரதா பீடம் பொது மக்களின் தரிசனத் திற்காக புத்தாண்டில் திறந்து வைக்கப் பட்டது.
விரைவில்பாக். ஆக்கிரமிப்பில் உள்ள உண்மையான சாரதா பீடத்தையும் அது அமைந்துள்ள புனித பூமியையும் மீட்டிடுவோம்.