உஷா மேத்தா

0
191

1. உஷா மேத்தா மார்ச் 25, 1920ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் பிறந்தார்.
2. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி. வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.
3. இவருடைய தந்தை ஒரு நீதிபதி. மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் இளங்கலை தத்துவக் கல்வியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். சட்டம் படிப்பதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பிற்காலத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று பேராசிரியாகப் பணி புரிந்தார்.
4. பள்ளியில் பயிலும்போதே ஆமதாபாத்தில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்திய நெறியில் நாட்டம் கொண்டார். காந்தி தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
5. 8 அகவைச் சிறுமியாக இருந்தபோதே சைமன் குழுவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார். கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். வாழ்நாள் முழுவதும் கதர்ப் புடைவை மட்டுமே உடுத்தி வந்தார்.
6. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும் போராட்டம் தொடர்பான செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் இரகசிய ரேடியோவை தொடங்கினார்.
7. இதனால் வெள்ளை அரசின் உளவுத் துறையும், காவல் துறையும் உஷா மேத்தாவைக் கண்காணித்தது. எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்பத்திற்கு ஆளானார்.
8. இதனால் இரகசிய வானொலி மூன்று மாதகாலம் மட்டுமே இயங்கியது. அவரைச் சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உஷா மேத்தாவுடன் போராடிய தோழர்களின் விவரங்களைத் தெரிவிக்கக் கட்டாயப் படுத்தினர். உஷா அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. இறுதியாக 1946 ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here