சி.ஆர்.பி.ஆப்., படையில் சேரும் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை
பணி ஓய்வு பெறும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 10 சதவீதம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் நாட்டு ராணுவத்தின் முப்படைகளில், குறுகிய கால ஆள்சேர்ப்புக்கான ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு 2020ல் துவக்கியது. இந்த திட்டத்தின்படி, 17 – 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், நான்கு ஆண்டு கால ராணுவப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சேரலாம். பணிக்காலம் முடிந்தபின் விண்ணப்பிக்கும் நபர்களில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
இந்த திட்டத்தின் வாயிலாக, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அனுமதிக்கப்பட்டுள்ள 1.30 லட்சம் காலியான கான்ஸ்டபிள் பதவிக்கான பொதுப்பிரிவில், ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.