காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி என்னும் சிற்றூரில் வளர்ந்தவர். இவர் சென்னை இராணுவத்தில் துபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணிபுரிந்தார். இவர் தன் சொந்த வருமானத்தில் சேர்த்த சொத்துகள் மூலம் ஏழைகள் பயன் பெறும் வகையில் பல சமுதாய சேவைகளைச் செய்துள்ளார்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்குத் தனி ஆளாக, பல இலட்சம் மதிப்புள்ள உதவிப்பொருட்களை தன் சொந்தச் செலவில் அனுப்பினார். இது போன்ற பல அறப்பணிகளைச் செய்துள்ளார்.
செங்கல்வ நாயக்கர் தனது சொத்துக்கள் அனைத்தையும் உயில் மூலம் எழுதி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார் . இதன் மூலம் வள்ளல் பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை கடந்த 145 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
இவ்வறக்கட்டளை மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களான, மருத்துவம், தொழிற்கல்வி, பொறியியற்கல்வி போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும்வகையில் செயல்பட்டு வருகின்றது.
கல்வியே அழியா செல்வம் ‘என்று தனது சொத்துகளை கல்விக்காக கொடை அளித்து, பல லட்சம் பேர் அறிவு கண் பெற காரணமாக இருந்த கல்வி வள்ளல் ‘பி .டி.லீ .செங்கல்வராய நாயக்கர் ‘ அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குவோம்..