தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற இடத்தில், 1,100 – 1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில், ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு உள்ளாட்சி அமைப்பு எப்படி செயல்பட வேண்டும், உறுப்பினர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும், அந்த உறுப்பினர் எவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன.உலகின் மிக பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்பதற்கு பல்வேறு வரலாற்று குறிப்புகள் உள்ளன. இவற்றில், தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது. என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.