பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு, வர்த்தகம், உள்ளிட்ட பங்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகம் தாக்கப்பட்டது குறித்தும், துாதரக கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத சக்திகள் மீது நடவடிக்கைக்கு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தவிர பிரிட்டனில் உள்ள இந்தியா பொருளாதார குற்றவாளிகளை நீதித்துறை வழிகாட்டின்படி இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தும் பேசினார்.